திருப்பாற்கடல் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி: அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்

திருப்பாற்கடல் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி: அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்

ராணிப்பேட்டை, செப். 23–


வாலாஜா ஊராட்சி ஒன்றியம், திருப்பாற்கடல் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யும் மதி அங்காடி கட்டிடத்தினை கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்து, 254 பயனாளிகளுக்கு ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் தொழிற் கடனுதவி வழங்கினார்.


அப்போது அவர் கூறியதாவது:


முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மகளிர்களுக்கு முக்கியத்துவம் அளித்து மகளிர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். ஏனென்றால் ஒரு குடும்பத்தை திறம்பட நிர்வகிப்பது மகளிர்கள் தான். மகளிர் தங்களின் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்திட அதிகளவில் கடனுதவி அளித்து வருகின்றார். இதன் மூலம் மகளிர்கள் சுயமாக சம்பாதித்து தங்களின் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடிகிறது.


இந்த மதி அங்காடியானது ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டும், ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அங்காடியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களான அழகு சாதனங்கள், பொம்மை வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், கைத்தறி சேலை வகைகள், தானிய உணவு வகைகள், ஊறுகாய் வகைகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள், அணிகலன்கள் மற்றும் அனைத்து வகையான மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.


இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) செந்தில்குமரன், வருவாய் கோட்டாட்சியர் ராஜி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், பாட்ஷா, வட்டாட்சியர் ஆனந்தன், உதவி திட்ட அலுவலர்கள் (மகளிர் திட்டம்) சிவக்குமார், கலைசெல்வன், அருண் குமார், வில்லியம்ஸ், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பிரியங்கா தனஞ்செழியன், சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%