திருவில்லிபுத்தூரில் 2 ஆம் நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்

திருவில்லிபுத்தூரில் 2 ஆம் நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்

 திருவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், நகராட்சி எல்லைப் பகுதிகளான நகைக்கடை பஜார், மார்க் கெட் பஜார் உள்ளிட்ட பல இடங்களில் கடைகளுக்கு முன்பாக ஏற்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை இரண்டாம் நாளாக கான்வென்ட் பள்ளி பகுதி மற்றும் சின்ன கடை பஜார் பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டன. மேலும், கடைகளின் மேல் பொருத்தப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகள் ஆகிய வற்றையும் ஞாயிற்றுக்கிழமைக்குள் அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நகர அமைப்பு அலு வலர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் கந்தசாமி, சுகா தார ஆய்வாளர் சங்கரன், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%