திருவில்லிபுத்தூர், டிச. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு நடை திறக் கப்பட்டது. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பரமபத வாசல் திறப்பு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்டு விழா கடந்த 20 ஆம் தேதி பச்சை பரப்புதல் வைபவத்துடன் தொடங்கி யது. பின்னர் ஆண்டாள் ரங்கமன்னார் புறப்பாடாகி பெரிய பெருமாள் சன்னதியில் உள்ள பத்து மண்டபத்தில் காட்சி யளித்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு தமிழகத்தின் முதல் கோயிலாக திருவில்லிபுத்தூ ரில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு பெரிய பெருமாள், ஆண்டாள் ரங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். இதில் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?