தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும்: அதிகாரிகள் தகவல்

தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும்: அதிகாரிகள் தகவல்



சென்னை: இரண்டு தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​கள் அடுத்த மாதம் இறு​திக்​குள் பயன்​பாட்​டுக்கு வரும் என, ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். சென்னை ஐ.சி.எஃப் ஆலை​யில் தற்​போது அதிவேக ரயி​லான வந்தே பாரத் ரயில் தயாரிப்​பில் கவனம் செலுத்​தப்​படு​கிறது. இது​வரை, 60-க்​கும் மேற்​பட்ட வந்தே பாரத் ரயில்​கள் தயாரித்து வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த ரயில்​களுக்கு பயணி​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு கிடைத்து வரு​கிறது.

இதையடுத்​து, அம்​ரித் பாரத் ரயில், தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், வந்தே மெட்ரோ உட்பட பல்​வேறு வகை​களில் வந்தே பாரத் ரயில்​கள் தயாரிக்​கப்​படு​கின்​றன. அதி​லும், தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​களை தயாரித்​து, இரவு நேரங்​களில் இயக்க ரயில்வே திட்​ட​மிட்​டுள்​ளது.

அதன்​படி, கர்​நாடக மாநிலம் பெங்​களூரில் உள்ள பிஇஎம்​எல் நிறு​வனத்​தில், முதல் தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி​கள் முடிந்​து, கடந்த ஆண்டு அக்​டோபரில் சென்னை ஐ.சி.எஃப். ஆலைக்கு வந்​தது. இந்த வந்தே பாரத் ரயி​லில், 16 ‘ஏசி’ பெட்​டிகள் இருக்​கின்​றன. பயணி​களை கவரும் வகை​யில் ஆரஞ்சு, மஞ்​சள் நிறங்​களில் உள்​அலங்​காரம் செய்யப்பட்டுள்ளது.

பல்​வேறு கட்ட ஆய்​வுக்கு பிறகு, இந்த தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சென்னை ஐ.சி.எஃப். ஆலை​யில் இருந்து டில்​லிக்கு அனுப்​பப்​பட்​டது. 10 மாதங்​கள் கடந்​துள்ள நிலை​யில் தூங்​கும் வந்தே பாரத் ரயில் இன்​னும் பயன்​பாட்​டுக்கு வராதது, பயணி​களிடம் ஏமாற்​றத்தை அளித்​துள்​ளது. இந்​நிலை​யில், அடுத்த மாதம் இறு​தி​யில் இந்த ரயிலை பயன்​பாட்​டுக்கு கொண்டு வர ரயில்வே நிர்​வாகம் நடவடிக்கை எடுத்​துள்​ளது.

இது குறித்​து, ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், பயணி​களை வெகு​வாக கவரும் வகை​யில், தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. மணிக்கு 180 கி.மீ. வரை வேக​மாக செல்​லும் திறன் கொண்​டது. பயணி​கள் வசதிக்​காக, ரயில் பெட்​டி​யின் உள்​பகு​தி​யில் சில மாற்​றங்​களும் செய்​யப்​பட்​டது.

நீண்ட துாரம் செல்​லும் தடத்​தில், தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயா​ராக உள்​ளது. 2-வது ரயில், தயாரிப்பு பணி​யும் முடிந்​து, அக். 15-க்​குள் வந்து விடும். எனவே, இரண்டு வந்தே பாரத் ரயில்​களும் அடுத்த மாதம் இறு​திக்​குள் பயன்​பாட்​டுக்கு கொண்டுவர ரயில்வே திட்​ட​மிட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%