தூத்துக்குடியில் இருந்து வந்தே பாரத் ரயில்: உப்பு ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை

தூத்துக்குடியில் இருந்து வந்தே பாரத் ரயில்: உப்பு ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை


தூத்துக்குடி. நவ.03–


தூத்துக்குடியில் இருந்து வந்தே பாரத் ரயிலை சென்னைக்கு தினசரி இயக்க வேண்டும் என்று தன்பாடு உப்பு ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு சங்கத்தின் சார்பில் அனுப்பியுள்ள மனுவில், ”தென் மாவட்டத்தின் தொழிழ் நகரமான தூத்துக்குடி வர்த்தகத்திற்கு மிகவும் புகழ்பெற்ற நகரமாகும். தூத்துக்குடியில் துறைமுகம், அனல்மின் நிலையம், கார் உற்பத்தி தொழிற்சாலை, உரத்தொழிற்சாலை போன்ற பல்வேறு தொழிற்சாலைகள், மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், உப்பு ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் தூத்துக்குடியில் இருந்து அதிக அளவில் வர்த்தக நோக்கத்துடன் பெருமளவு தொழில் முனைவோர்கள் சென்னை சென்று வருகின்றனர்.


வந்தே பாரத் இயக்க வேண்டும்


மேலும் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன் பதிவில் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக உள்ளதால் சென்னைக்கு தினசரி வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். லோக்மான்ய திலக் -மதுரை வாராந்திர ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடியிலிருந்து சென்னை வழியாக ஹைதராபாத்துக்கு இரவு நேர இரயில் இயக்கப்பட வேண்டும். இதன் மூலம் மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா பயணிகள் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும். தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு உள்ளுார் (லோகல்) ரயில்கள் இயக்க வேண்டும்.


திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக ரயில்களை தினமும் இணைப்பு ரயிலகள் முலம் தூத்துக்குடிக்கு இயக்கப்பட வேண்டும். இதன் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் மிகவும் பயன் உள்ளதாக அமையும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%