தெலுங்கானாவில் இன்று அதிகாலை மரத்தில் கார் மோதல்: 4 கல்லூரி மாணவர்கள் பலி
Jan 10 2026
10
ரங்கா ரெட்டி, ஜன. –
கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி ஏற்பட்டவிபத்தில் 4 கல்லூரி மாணவர்கள் பலியானார்கள்.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மோகிலா பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் சூர்ய தேஜா, சுமித், ஸ்ரீநிகில், ரோகித், மாணவி நட்சத்திரா. இவர்கள் 5 பேரும் இன்று அதிகாலை மோகிலாவிலிருந்து ஐதராபாத்திற்கு காரில் புறப்பட்டு சென்றனர்.
மிர்ஜ குடா என்ற இடத்தில் சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கர வேகத்தில் மோதியது. விபத்தில் காரில் இருந்த சூர்ய தேஜா, சுமித், ஸ்ரீ நிகில், ரோகித் ஆகியோர் காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். நட்சத்திரா படுகாயம் அடைந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நட்சத்திராவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே பல்கலைக்கழகத்தை சேர்ந்த 4 மாணவர்கள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?