
வந்தவாசி, ஜூலை 22:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 32 ஆம் ஆண்டு முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து குத்து விளக்கு ஏற்றி வைத்து, தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக இயக்குனர் பா.போஸ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் இரா.ஏழுமலை வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, புதுவை பட்டிமன்ற பேச்சாளர் கலைமாமணி கலக்கல் காங்கேயன் பங்கேற்று, இன்றைய சூழலில் கல்வியே மாணவர்களின் எதிர்கால சொத்து என்று கூறினார். மேலும் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே சிறந்தது என்று வலியுறுத்தினார். நிகழ்வில் கல்லூரி இயக்குநர்கள் டிடி.ராதா, டிகேஜி ஆனந்தன், சங்கரன், எஸ்.அப்பாண்டைராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். இறுதியில் கல்லூரி பொருளாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?