தேசிய துப்பாக்கி சுடும் போட்டிக்கு செட்டியபட்டி அரசு பள்ளி மாணவி தேர்வு

தேசிய துப்பாக்கி சுடும் போட்டிக்கு செட்டியபட்டி அரசு பள்ளி மாணவி தேர்வு


சின்னாளப்பட்டி, செப்.30- தேசிய துப்பாக்கிச் சூடும் போட்டிக்கு தமிழ்நாடு அணி சார்பில் செட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் பாண்டியராஜன், கண்மணி ஆகியோரின் மகள் தனுஸ்ரீ (14) தேர் வாகியுள்ளார். தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி மத்தியப்பிரதேசம் போபால் மாநிலத்தில் வரும் ஜனவரி 5 முதல் தேதி 9 தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானம் அருகே உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அணிகளுக்கான வீராங்கனை தேர்வு நடந்தது. இதில் 14 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட மாணவியர் (ஓபன் சைட்) பிரிவில் செட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி தனுஸ்ரீ தேர்வு செய்யப்பட்டார். இதில் தனுஸ்ரீ 317 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் தேர்வாகியுள்ளார். 

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%