தேஜஸ் விமான விபத்தில் விமானி உயிரிழப்பு: செல்வப்பெருந்தகை இரங்கல்

தேஜஸ் விமான விபத்தில் விமானி உயிரிழப்பு: செல்வப்பெருந்தகை இரங்கல்



துபாயில் விமான கண்காட்சியில் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது

சென்னை


ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த போர் விமானங்கள் உள்பட பல்வேறு விமானங்கள் பங்கேற்றுள்ளன.


இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் தயாரிப்பான தேஜஸ் ரக போர் விமானமும் இடம்பெற்றுள்ளது. இந்த விமானம் இன்று மதியம் 2.10 மணியளவில் வானில் சாகசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வானில் இருந்து கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார்.


இந்நிலையில், தேஜஸ் விமான விபத்தில் விமானி உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,


துபாயில் போர் விமானக் கண்காட்சியில் சாகத்தில் ஈடுபட்ட தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளாகி விமானி உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது.


விபத்துக்குள்ளான விமானியின் குடும்பத்திற்கும், அவரது நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%