தேவாரத்தில் கஞ்சா விற்பனை: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தேவாரத்தில் கஞ்சா விற்பனை: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது



தேனி, டிச.தேவாரத்தைச் சேர்ந்த கஞ்சா சில்லறை வியாபாரி அஜித்குமார், சிலம்பரசன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தேனி ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார். தேவாரத்தில் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வர் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்த னர். இதில் தேவாரத்தை அஜித்குமார், சிலம்பரசன் ஆகி யோர் தொடர்ந்து சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வழக்கு கள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா, தேனி மாவட்ட ஆட்சி யருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டார். 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%