தை மாதத்தின் சிறப்புகள்

தை மாதத்தின் சிறப்புகள்



தை மாதம் மிகவும் குதூகலமான மாதம் சூரிய பகவான் மகர ராசியில் நுழைவதால் இம்மாதம் மகர மாதம் என்றும் சொல்லப்படுகிறது சூரிய பகவான் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பிரயாணம் செய்யும் உத்திராயண புண்ணிய காலம் இம்மாதத்தில் தொடங்குகிறது. இது தேவர்களின் பகல் பொழுதும் ஆகும் மேலும் விவசாயிகள் ஆடியில் விதைத்த பயிரை இந்த மாதத்தில் தான் அறுவடை செய்வார்கள். எனவே மகிழ்ச்சி மிகுதியால் தெய்வங்களுக்கு விழா எடுத்துக் கொண்டாடவும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் பல செய்யவும் இந்த மாதம் உகந்த மாதமாக இருக்கிறது. சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சங்கராந்தி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

 தை வெள்ளி, செவ்வாய் அம்மன் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. அம்மன் மீது பூஜை செய்து சுலோகங்கள் சொல்ல நம் அறிவானது நன்கு வளரும்.

 தைப்பூசம் மிகவும் விசேஷமானது தைப்பூசத்தில் புண்ணிய தீர்த்தங்கள் நீராடினால் நம் அறிவாற்றல் வளரும் என்பது ஐதீகம். முருகனுக்கு அசுரர்களை அழிக்க அன்னை பார்வதி வேல் கொடுத்து இந்த தைப்பூசத் தான் அதனால் இந்த திருநாள் தமிழர்களால் முருகனை துதித்து சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தை அமாவாசை பித்துருக்களின் உலகம் திறப்பதால் இந்த அம்மாவாசையில் செய்யும் தர்ப்பணம் மிகவும் உயர்ந்தது பித்ருகளின் ஆசியை அளவிட முடியாத அளவு பெற முடிகிறது. தை மாத வளர்பிறையில் வரும் சப்தமியானது ரத சப்தமி அன்று இந்துக்களால் கொண்டாடப்படுகிறது சூரியன் தன்னுடைய வட திசை பயணத்தை அன்று தான் தொடங்குகிறார் அன்று விரதம் மேற்கொண்டால் நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும் 

தை மாத தேய்பிறை ஏகாதசி சபலா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது இந்த ஏகாதேசியில் உண்ணாமல் உறங்காமல் விரதம் இருந்தால் செய்த பாவங்களில் இருந்து விடு பெற முடியும் ஒளிமயமான வாழ்க்கை அமையும் வளர்பிறை ஏகாதேசி புத்திரதா ஏகாதேசி சந்தான ஏகாதேசி என்று அழைக்கப்படுகிறது இந்த நாளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிட்டும்


பைரவர், வீரபத்திரன் வழிபாடு


 தை மாதத்தில் வரும் முதல் செவ்வாயில் பைரவர் வழிபாடு செய்தால் அனைத்து நன்மைகளும் கிட்டும்


எல்லா செவ்வாயிலுமே வீரபத்திரர் விரதம் இருப்பது நல்லது அப்படி முடியாதவர்கள் தை மாத செவ்வாயில் வீரபத்திர விரதம் இருந்தால் வருடம் முழுவதும் அந்த விரதம் இருந்த பலன்கள் கிடைக்கும்


சாவித்திரி கௌரி விரதம் 


 தை மாதம் இரண்டாம் நாளில் சாவித்திரி கௌரி விரதம் தொடங்கி 9 நாட்கள் இருக்க வேண்டும். இந்த விரதம் சிவபெருமானால் மார்க்கண்டேயருக்கு அருளப்பட்டது. மார்க்கண்டேயர் இதனை தர்மருக்கு போதித்தார். களிமண்ணில் சாவித்திரி தேவி உருவம் செய்து மௌன விரதம் இருந்து 9 முடிகள் போட்ட நோன்பு கயிற்றை கையில் கட்டிக்கொண்டு ஒன்பது நாட்கள் பூஜை செய்து ஒன்பதாம் நாள் 9 சுமங்கலிகளுக்கு முறத்தில் வெற்றிலை பாக்கு பழங்கள் தந்து இந்த விரதத்தை முடிக்க வேண்டும். இந்த விரதம் நீண்ட ஆயுளுடன் சகல செல்வங்கள் புத்தர பாக்கியம் அருளக்கூடியது .


தன்மானம் பிறந்த மகான்கள்


தை மாதம் மகம் நட்சத்திரத்தில் சக்கரத்தின் அம்சமாக கருதப்படும் திருமழியிசை ஆழ்வார் பிறந்தார். எம்பார் என்று அழைக்கப்பட்ட கோவிந்த பட்டர் தை புனர்பூசத்தில் பிறந்தார்.


கோவில் உற்சவங்கள்



காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் கணு உற்சவம் சிறப்பாக நடைபெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பழனி சிதம்பரம் கருப்பூர் திருவானைக்கா வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீமுஷ்ணம் போன்ற பல கோவில்களில் தை மாத உற்சவங்கள் களைக்கட்டும். சபரிமலையில் மகரஜோதி உற்சவம் நடைபெறும்.


 சூரிய பகவானுக்குரிய தலங்களான தலைஞாயிறு, திருப்பரிதிநியமம், திருமங்கலகுடி, திருச்சிறுகுடி, ஞாயிறு, அகிய தலங்களில் இம்மாதத்தில் சென்று வழிபடுவது சிறப்பு.


தை பிறந்தால் வழி பிறக்கும். மார்கழியில் நோன்பிருந்து பெற்ற பலன் காரணமாக தை மாதத்தில் தொட்டதெல்லாம் துலங்கும். எனவே இம்மாதத்தில் வரும் அனைத்து பண்டிகை பூஜைகளை சிறப்பாக கொண்டாடி மங்கள நிகழ்ச்சிகளை நடத்தி அனைவரும் மகிழ்வோமாக



வனஜா நாகராஜன்

யு எஸ் ஏ

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%