தொழிற்கருவித் திருவிழா(ஆயுதபூஜை)

தொழிற்கருவித் திருவிழா(ஆயுதபூஜை)


-பாவலர் கருமலைத்தமிழாழன்


மங்கலத்தை மனையெல்லாம் பொழிய வைத்து

மங்காமல் ஒளிவீசும் செங்க திர்க்கும்

தங்கமாக நெல்மணிகள் குவிய வைக்கத்

தம்முழைப்பை நல்குகின்ற மாடு கட்கும்

பொங்குகின்ற தைநாளில் சுற்றத் தோடு

பொலிவான கரும்போடும் மஞ்ள ளோடும்

செங்கதலி பாலோடும் பொங்க லிட்டுச்

செய்நன்றி காட்டுகின்றார் வாழ்த்து கூறி !


கொடுமைகளைச் செய்துவந்த அரக்கன் தன்னைக்

கொன்றிட்ட நாள்தன்னை நன்நா ளாக

நடுக்குற்ற மக்களெல்லாம் இன்ப மாக

நல்தீபா வளியெனக்கொண் டாடு கின்றார்

விடுதலைதாம் நாட்டிற்குக் கிடைத்த நாளை

வித்திட்டுக் குடியரசாய் விளைந்த நாளை

எடுப்பாக மக்களெல்லாம் ஒன்று சேர்ந்தே

எழிலாகக் கொண்டாடி மகிழு கின்றார் !


தொழிலாலே நாடுதன்னை உயர்த்து கின்ற

தொழிற்சாலை எந்திரங்கள் ! ஏழ்மை தன்னை

ஒழிப்பதற்குத் தொழிலாளர்க் குதவு கின்ற

ஒண்கருவி ! நெசவுதையல் எந்தி ரங்கள்

வழிவழியாய் செய்தொழிலின் கருவி யென்றே

வாழ்க்கைக்கு ஒளியேற்றி வாழ வைக்கும்

விழியான கருவிகளைப் போற்று கின்ற

விழாதன்னைக் கொண்டாடி மகிழு வோமே !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%