தோட்டா தரணிக்கு செவாலியே விருது! முதலமைச்சர் வாழ்த்து
Nov 14 2025
121
சென்னை: கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசு 1957-ஆம் ஆண்டு முதல் ‘செவாலியே’ விருதை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான செவாலியே விருது, திரைப்பட கலை இயக்குநர் 64 ஆண்டுகளாக பணி யாற்றி வரும் தோட்டா தரணி-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் வாழ்த்து இந்நிலையில், தோட்டா தரணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டில் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணிக்கு, பிரான்சு அரசின் உயரிய அங்கீகாரமான செவாலியே விருது அறிவிக்கப் பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணி, இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமை யளிக்கிறது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தோட்டா தரணிக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலி னும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?