த.வெ.க.வுடன் பேச்சுவார்த்தை என்பது வதந்தி: காங்கிரஸ் விளக்கம்
Jan 05 2026
10
சென்னை, ஜன.
தி.மு.க. – காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தவெகவுடன் பேச்சுவார்த்தை என்பது வதந்தி என தமிழக காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் தமிழக காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. தலைமையுடன் காங்கிரஸ் தலைமை பேச்சு நடத்தி வருகிறது. தி.மு.க. – காங்கிரஸ் கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளது. த.வெ.க.வுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது என்பது வதந்தி. தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என யார் கூறியது? தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவே குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரை ஒரு மாதத்திற்கு முன்னரே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.கூட்டணி தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. கூட்டணி தொடர்பாக தி.மு.க.வுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
தேர்தல் தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெற்று உள்ளோம்.
ஜோதிமணி தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. இது போன்ற உட்கட்சி விவகாரங்கள் பொது வெளிக்கு செல்ல கூடாது.
தேர்தல் நேரங்களில் இதுபோன்ற கருத்துகள் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். ஜோதிமணியிடம் கருத்துக் கேட்டுள்ளோம். பிரச்னைகள் குறித்து அவர் எங்களிடம் தெரிவிக்கலாம். கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளிடமும் விளக்கம் கேட்டுள்ளோம். அகில இந்திய தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. உட்கட்சி பிரச்னைகளை நிர்வாகிகள் பொதுத்தளத்தில் பகிர கூடாது. இவ்வாறு கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?