நச்சுப் பொருள் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நச்சுப் பொருள் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நச்சுப் பொருள் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ஐரோப்பா நாடுகளில் பால் உணவுப் பொருட்களை திரும்பப் பெறுகிறது ‘நெஸ்லே’ நிறுவனம்


அபுதாபி, ஜன. 


குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நச்சு மாசுபாடு இருக்கலாம் என்ற சந்தேகத்தைத் தொடர்ந்து, நேஸ்லே நிறுவனம் தனது சில குழந்தை ஊட்டச்சத்து தயாரிப்புகளின் தொகுப்புகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக ஐரோப்பா நாடுகளில் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள இந்த நிறுவனம் அதனைத் தொடர்ந்து ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களிலும் இந்த நடவடிக்கை விரிவுப்படுத்துகிறது.


குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை தயாரிப்பதில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக இருப்பது நெஸ்லே நிறுவனம். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள தாய்மார்கள் பிறந்த குழந்தைகளுக்கு தாய் பாலுக்கு பதிலாக நெஸ்லே பால் பொருட்களையே பயன்படுத்தி வருகின்றனர். சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட நேஸ்லே நிறுவனம், arachidonic acid (ARA) oil மற்றும் அதனுடன் தொடர்புடைய எண்ணெய் கலவைகளில் மேற்கொண்ட பரிசோதனைகளில், முன்னணி விநியோகஸ்தரிடமிருந்து பெறப்பட்ட ஒரு மூலப்பொருளில் தரக் குறைபாடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ஐரோப்பா நாடுகளில் சில தயாரிப்புத் தொகுப்புகளை திரும்பப் பெற்றதாக அறிவித்தது.


இந்த திரும்பப் பெறல் நடவடிக்கை, நெஸ்லே நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து தன்னார்வமாகவும் முன்னெச்சரிக்கை யாகவும் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட ஒரு மூலப்பொருளில் பேசிலஸ் செரியஸ் என்ற ஒருவகையான பாக்டீரியா இருப்பதாக கண்டறியப்பட்டதாகவும், அது செருலைடு என்ற நச்சுப் பொருளை உருவாக்கக்கூடும் என்பதால், நுகர்வோர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.


குழந்தைகளில் எந்தவொரு அறிகுறியும் இல்லை என்றால் கவலைப்படத் தேவையில்லை என்றும், குழந்தையின் உடல்நலம் அல்லது ஊட்டச்சத்து குறித்து சந்தேகம் ஏற்பட்டால், குழந்தை மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரை அணுகுமாறு பெற்றோருக்கும் பராமரிப்பாளர்களுக்கும் நேஸ்லே அறிவுறுத்தியுள்ளது. மேலும், தங்களது சந்தையில் திரும்பப் பெறல் அறிவிப்பு பொருந்தினால், அறிகுறிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறும் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட தொகுப்புகள் கிடங்குகளில் தனிமைப்படுத்தப்பட்டு, அனைத்து விற்பனை நிலையங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களிலிருந்தும் அவற்றை முழுமையாக அகற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், பால் பொருள்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அவற்றை திருப்பி அளித்து முழுமையான பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதற்கான வழிகாட்டுதல்களை நெஸ்லே வழங்கி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஐரோப்பாவைத் தொடர்ந்து பிரிட்டன், அயர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் பொது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.


உலகளாவிய அளவில் சில குழந்தை ஊட்டச்சத்து தயாரிப்புகளை நேஸ்லே நிறுவனம் திரும்பப் பெற்றுள்ள நிலையில், அவற்றில் எதுவும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படவோ விற்பனை செய்யப்படவோ இல்லை என்று நேஸ்லே இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து குழந்தை பால் தயாரிப்புகளும் நாட்டுக்குள்ளேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%