(கவிதை)
அறம் விற்பனையாகும்
அரங்கமே உலகம்!
முகமூடி மக்கள்
முண்டியடிக்கும் களம்!
காசு கடவுள் ஆகும்
கண்கள் குருடாகும்!
பாசம் பங்குச் சந்தையில்
பரிவர்த்தனை செய்யப்படும்!
சுயநலம் சிம்மாசனம்
சாதாரணம் அடிமை!
நியாயம் கேள்வி கேட்கும்
நிசப்தமே பதிலாகும்!
பசியும் படிப்பும்
புறந் தள்ளப்படும்
பொய்மை பெருமையாகி
புகழ் பதக்கமாகும்!
இருப்பினும் இருளுக்குள்
ஒளி மறைந்ததில்லை!
உண்மை உயிர் துடிக்கும்
உள்ளங்களால் நாளை மலரும்!

முகில் தினகரன்,
கோவை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%