நன்றிக்கடன்

நன்றிக்கடன்



    " முகம் தெரியாது ஆனால் பண உதவி மட்டும் மாதா மாதம் மாதவன் அக்கவுன்ட்டுக்கு வந்து விடும். இது தொடர்கதையாக இருந்தது .


        அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவன் மாதவன் அவனோடு நாற்பது பேர் ஒன்றாக படித்தவர்கள் .


     அதில் ரவியும் ஒருவன் . மாதவன் நன்கு படிக்கும் மாணவன் . ரவி சுமார் படிப்பாளி தான் .


    ரவிக்கும் மாதவனுக்கும் ஏற்றபட்ட மனக்கசப்பால் இருவரும் பேசுவதில்லை . ஆனால் மாதவனின் நோட்ஸ் , ரிக்கார்டு மற்றும் பல படிக்கும் பொருட்களை ஜெராக்ஸ் எடுத்து வாங்கி நண்பன் மதன் மூலம் படித்து வந்தான் ரவி .


   கல்லூரி படிப்பு காலம் முடிந்தது அனைவரும் பிரிந்து சென்றனர். முழுக்க முழுக்க மாதவனின் உழைப்பால் ரவி பலன் பெற்று தேர்ச்சி பெற்று விடைபெற்றான் .


     குடும்ப சூழ்நிலை காரணமாக மாதவன் அவன் அப்பாவின் பெட்டிக் கடை, சின்ன மளிகை கடை இரண்டையும் கவனிக்க வேண்டி இருந்தது .


    பெரிய வருமானம் எதுவும் இல்லை இருந்தாலும் தன் அப்பா அம்மாவை நன்கு கவனித்து வந்தான். திருமணம் ஆகி ஒரு குழந்தை என அவனுக்கு ஒரு குடும்பமும் ஆனது.


      விதி யாரை விட்டது என்று புலம்பி விட்டு தன் வியாபாரத்தை கவனித்து வந்தான் மாதவன்.


     ரவி கடுமையான முயற்சி பயிற்சியால் அரசாங்க வேலையில் அமர்ந்தான். நல்ல பதவி நல்ல சம்பளம் . பிறகு திருமணமாகி குடும்பம் குழந்தை என ஆனது.



    தன் நண்பன் மதனை சந்தித்து மாதவன் குடும்பம் பற்றி விபரம் கேட்டு அறிந்தான் ரவி . தான் மாதவனால் தான் படித்து உயர்ந்தோம் . வேலையும் அவனால் தான் கிடைத்தது என்று நினைத்தான்.


     மாதவன் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்று எண்ணினான் ரவி. உடன் களத்தில் இறங்கினான் ரவி .


     தனக்கு தெரிந்த பாங்க் மானேஜரை அனுப்பி மிகப் பெரிய தொகையை கடனாக மாதவனுக்கு கொடுக்க செய்தான்.


      பணம் பெற்ற மாதவன் மளிகை கடையை விரிபடுத்தி விட்டான். சில ஆண்டுகள் சுமராக சென்றது வியாபாரம் . அந்த கால கட்டத்தில் தான் ரவி பணம் அனுப்பி மாதவன் பாங்க் லோன் தவணை கட்ட உதவினான் .


     மாதவன் வியாபாரம் பெருகியது . பாங்க் லோன் முழுமையாக அடைந்து போனது . கையில் பணமும் நிறைய சேர்ந்தது. தனக்கு இது காலம் பணம் கொடுத்த அனுப்பிய நல்லவரை பார்க்க வேண்டும் நன்றி சொல்ல வேண்டும் என்றி நினைத்தான் மாதவன் .


       தற்செயலாக தன் நண்பன் மதனை சந்திக்க நேர்ந்தது மாதவனுக்கு நடந்தவைகளை பற்றி சொன்னான் மாதவன் .


      மாதவனுக்கு இதுவரை உதவியது பேங்க் லோன் கிடைக்க செய்தது எல்லாமே கல்லூரியில் கூட வகுப்பில் படித்த ரவி தான் என்பதை மதன் மூலம் கேட்டு அறிந்து மனம் நெகிழ்ந்தான் மாதவன்.


       தன் மளிகை கடையின் பெயரை ரவி மளிகை ஸ்டோர் என்று மாற்றினான் .


     தன் மனைவி குழந்தையுடன் ரவியின் விலாசம் கேட்டு விசாரித்து அவன் வீட்டுக்கு சென்று மனமார நன்றி தெரிவித்தான் மாதவன் .


    கல்விக்கண் திறந்த நண்பனுக்கு நன்றிக்கடன் அடைத்த மன நிம்மதியில் உருகி போய் மௌனமாய் கை கூப்பி நின்றான் ரவி .


சீர்காழி. ஆர். சீதாராமன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%