.
கடலூர்,டிச.28-
திட்டக்குடி அருகே, ஐந்து ஊராட்சிகளில் அமைச்சர் சி.வெ.கணேசன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த போத்திரமங்கலம், கொட்டாரம் நெய்வாசல், ஆவினங்குடி, பட்டூர், ஆகிய ஊராட்சியில் மக்கள் குறை தீர் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் போத்திரமங்கலம் ஊராட்சியில் அமைச்சர் கணேசன் முன்னிலையில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் அகிலா அருதாஸ் தலைமயில் 25 நபர்கள் திமுகவில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் திட்டக்குடி தாசில்தார் உதயகுமார், மங்களுர் தி.மு.க., ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், நகர செயலாளர் பரமகுரு, நெய்வாசல் திமுக நிர்வாகிகள் தங்கராசு ராமச்சந்திரன் முருகானந்தம் இளங்கோவன் சரண்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?