
பாபநாசம், செப். 15-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கபிஸ்தலம் அருகே, உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த அம்மன் நகரில் வசித்து வரும் ஐயப்பன் என்பவர், நாட்டு வெடி மூட்டைகளை வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. சில்லரை விற்பனைக்காக அரசு உரிமம் இன்றியும், அரசு அனுமதி இன்றியும் 47 மூட்டைகளை நாட்டு வெடிகளை வாங்கி, சில்லரை விற்பனைக்கென வைத்திருந்தார். நாட்டு வெடி மூட்டைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஐயப்பனை கைது செய்ததுடன், அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 47 மூட்டை நாட்டு வெடிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?