நிலக்கோட்டை அருகே உச்சணம்பட்டியில்,ரூபாய் 32 இலட்சம் மதிப்பிலான புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.

நிலக்கோட்டை,அக்.07:
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உச்சணம்பட்டியில் ரூபாய் 32 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நரியூத்து ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்தை ஒன்றிய செயலாளர் சௌந்தரபாண்டியன் திறந்து வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரியூத்து ஊராட்சி உச்சணம்பட்டியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பழனி எம்எல்ஏவும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஐபி.செந்தில்குமார் பரிந்துரைப்படி,ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவுப்படி ரூபாய் 32 லட்சம் ஒதுக்கப்பட்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது,அதனை நேற்று நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சௌந்தரபாண்டியன் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து குத்து விளக்கேற்றி வைத்தார்,இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல், உதவி பொறியாளர் வேல்மணி,ஊராட்சி செயலர் கணேசன்,ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஆரோக்கியம்,அழகேசன்,இளைஞரணி அமைப்பாளர் செம்பர்சுரேஷ்,மாணவரணி துணை அமைப்பாளர் பெனிட் மற்றும் திமுக நிர்வாகிகள் பதினெட்டாம்படி,பால்ராஜ்,குமரவேல்,கணேசன்,தங்கவேல்,ராஜேந்திரன், நாகரத்தினம்,சேகர்,அஜித்,சுப்ரமணி, முருகேசன்,குணா,கணேசன்,ராமன்
உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?