நிஜத்தை நினைவூட்டி
நிகழ்காலத்தை
நினைக்க வைக்கும்
மலரும் நினைவுகளாய்
நிகழ்வுகள்
மனதில் உலா வரும்
பிள்ளைப் பருவ
நிழற் படங்கள்
கள்ளமில்லாப்
புன்னகை தாங்கும்
பள்ளிக்கால நிழற்படங்கள்
கொள்ளை இன்பம் தரும்
மணநாளில் தொடக்கமாய்
மந்திரப் புன்னகை
தாங்கி நிற்கும்
உள்ளச் சிரிப்பும்
உதட்டுச் சிரிப்பும்
காலத்தின் கைகளில் மாறிவிடும்
ஆவணங்கள் தாங்கும் நிழற்படமோ
ஆளையே மாற்றும் அற்புதம்
பிரிந்தவர் கூடவும்
கூடியவர் பிரியவும்
நிழற்படமே சாட்சியாகும்
கருப்பு வெள்ளையில்
அழகூட்டி
கால மாற்றத்தில்
வண்ணமாக்கி
நினைவுகளைத் தாங்கும்
நிழற்படங்கள்
வாழ்க்கையின் சான்றாகி
வடிவத்தில் பலவாகி
நினைவலைகள் தாங்கும்
நிழற்படம்
நீங்காத நினைவுகளின் உறைவிடம்.
*************************************
தமிழ்நிலா
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?