நீரிழிவு மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் அமெரிக்க விசா கிடைக்காது- டிரம்ப் நிர்வாகம் புதிய அறிவிப்பு
வெளிநாட்டவர்கள் அமெரிக்கா வந்து தங்கி படிப்பதற்கும், வேலை செய்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை டிரம்ப் நிர்வாகம் விதித்து வருகிறது. வெளிநாட்டவர்கள் அமெரிக்கா வந்து கல்வி பயின்று வேலை வாய்ப்பு பெறுவதால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகிறது என கருதுகிறது .
அமெரிக்க நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக டிரம்ப் நிர்வாகம் கூறி வருகிறது. இந்த சூழலில் அமெரிக்காவிற்கு விசா வேண்டிய விண்ணப்பம் செய்யக்கூடிய வெளிநாட்டவர்களுக்கு உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது என்றால் அவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் என டிரம்ப் நிர்வாகம் புதிய வழிமுறையை வெளியிட்டு இருக்கிறதாம்.
உங்க உடம்புல இந்த நோய்கள் இருந்தா அமெரிக்க விசா கிடைக்காது- டிரம்ப் நிர்வாகம் புதிய அறிவிப்பு
அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களுக்கு டிரம்ப் அரசு இந்த வழிகாட்டுதல்களை அனுப்பி வைத்திருப்பதாக கேஎஃப்எஃப் ஹெல்த் நியூஸ் என்ற தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அமெரிக்க விசா வேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்கு தொற்று நோய் ஏதேனும் இருக்கிறதா, என்னென்ன தடுப்பூசிகளை இதுவரை அவர்கள் செலுத்தி இருக்கிறார்கள், அவர்களின் மனநிலை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதெல்லாம் ஆய்வு செய்யப்படுவது வழக்கம்தான். ஆனால் இதில் தற்போது கூடுதலாக நீரிழிவு, இதய நோய் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றையும் சேர்த்திருக்கிறார்கள் .
உங்க உடம்புல இந்த நோய்கள் இருந்தா அமெரிக்க விசா கிடைக்காது- டிரம்ப் நிர்வாகம் புதிய அறிவிப்பு
அமெரிக்கா அரசாங்கம் அனைத்து அமெரிக்க தூதரகளுக்கும் அனுப்பி உள்ள வழிகாட்டுதலில் விசா விண்ணப்பத்தை ஏற்கும் முன்னர் அந்த விண்ணப்பதாரரின் உடல் நலன் எப்படி இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், குறிப்பாக இதய நோய் , சுவாச நோய் ,புற்றுநோய், நீரிழிவு, வளர்ச்சிதை மாற்ற நோய்கள், நரம்பியல் நோய்கள் மற்றும் மனநல நிலைமைகள் உள்ளிட்ட சில மருத்துவ நிலைமைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நோய்கள் பராமரிப்புக்கு லட்சக்கணக்கான டாலர் தேவைப்படலாம் அந்த செலவுகளை ஏற்கக் கூடிய வகையில் விண்ணப்பதாரர் இருக்கிறாரா என்பதையும் விசா அதிகாரிகள் மதிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பதாரரின் குழந்தைகள் அல்லது வயதான பெற்றோர் போன்ற குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையை மதிப்பிட வேண்டும் என்றும் அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டிருக்கிறது. அதாவது அவரை சார்ந்து இருப்பவர்களில் யாருக்காவது குறைபாடுகள், நாள்பட்ட மருத்துவ நிலைமைகள் அல்லது சிறப்பு கவனிப்பு அல்லது பராமரிப்பு தேவைப்படுகிறதா விண்ணப்பதாரால் தன்னுடைய இந்த வேலை வாய்ப்பை தக்க வைத்து கொண்டு அவர்களுக்கான பராமரிப்பையும் மேற்கொள்ள முடியுமா என மதிப்பிட வேண்டும் என தெரிவித்து இருக்கிறது.
ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் குடியேற்ற துறை வழக்கறிஞர் சோபியா விண்ணப்பதாரர்களின் மருத்துவ பராமரிப்புக்கான செலவு மற்றும் அதற்கு ஏற்ப அமெரிக்காவில் வேலை செய்வதற்கான அவர்களின் திறன் குறித்து அதிகாரிகள் மதிப்பிட வேண்டும் என்பதை தான் இந்த புதிய வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன என தெரிவிக்கிறார். இது அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விண்ணப்பம் செய்பவர்களுக்கே பொருந்தும் என ஒரு சாரார் கூறுகின்றனர்.