நீலகிரி அஞ்சல் கோட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வணிகர்களை ஊக்கு விக்கும் விதமாகவும் வாடிக்கை யாளர்களின் வேண்டுகோ ளின்படியும் பொது மக்களின் சேவையைக் கருதியும் கடிதம், பார்சல் புக்கிங்சேவை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை தொடர்ந்து இந்த சேவையை விரிவுபடுத்தும் விதமாக வாடிக்கை யாளர்களின் நலன் கருதி நீலகிரி கோட்டத்தில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் துணை அஞ்சலகங்களிலும் நடைமுறைப்படு த்தப்பட்டுள்ளது. தலைமை அஞ்சலகத்தில் காலை 8 மணி முதல் மாலை 8 மணிவரையிலும் துணை அஞ்சலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புக்கிங் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல்துறை மூலமாக வெளிநாடுகளுக்கான ஸ்பீட்போஸ்ட், பதிவுதபால், பார்சல் மற்றும் ஐடிபிஎஸ் சேவைகளின் வழியாக குறைந்த கட்டணத்தில் அனுப்பக்கூடிய வசதி உள்ளது.
இதில் ஸ்பீட்போஸ்ட் சேவையில் 35 கிலோவரையிலும், பார்சல் சேவையில் 20 கிலோ வரையிலும் மற்றும் குறிப்பிட்ட நாடுகளுக்கு ஐடிபிஎஸ் சேவையில் 5 கிலோ வரையிலும் அனுப்ப முடியும். சிறுகுறு ஏற்றுமதியாளர்களுக்கு ஐடிபிஎஸ் சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் அனுப்பும் அனைத்து தபால்களையும் டிராக் செய்யும் வசதி உள்ளது. பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களுடைய பொருட்களை உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதை எளிமைப்படுத்தும் விதமாக பார்சல் பேக்கிங் பொருட்களை குறைந்த விலையில் தலைமை அஞ்சலகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட அனைத்து சேவைகளையும் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பயன்பெறுமாறு நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அசோக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?