நூலறுந்த பட்டம்

நூலறுந்த பட்டம்



”பல வருடங்களாக நான் சேமித்த வங்கியிலிருக்கும் என் பணத்தை எடுக்க முடியாதா, ஏன் சார்?”


”உங்க பெயரின் முன்பு திருமதிக்கு பதிலாக திரு என மாறி இருக்கிறது”


”நான் அப்படி எதுவும் மாற்றம் செய்யச் சொல்லலையே..போகட்டும்

இதை திருத்த நானென்ன செய்ய வேண்டும்?’


”ஆதார் கார்டு, பான் கார்டுடன் ஒரு போட்டோ கொடுங்க..!”


நாளைக்கு கொண்டு வருகிறேன் ஐயா..


மறு நாள்..


”ஐயா..நீங்கள் கேட்டவையுடன் எலெக்ஷன் வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் உடன் இணைத்துள்ளேன்..”


”ஓகே அம்மணி இரு நாட்கள் கழித்து வாங்க..!”


மீண்டும் வந்த பெண்மணி..


”ஐயா என் கணக்கு நேராகிடுச்சா?”


”இதன் மீது தலைமை அலுவலகத்திற்கு ஒரு புகார் எழுப்ப வேண்டும். நிலைமை சீராக சில நாட்கள் ஆகலாம்”


”எனக்கு பண முடை. ரொம்ப நெருக்கடியாய் இருக்கிறதே..!”


”நோ டெபிட் கணக்கு என மாறியதால், என்னால் ஒன்றுஞ் செய்ய இயலாது. அடுத்த வாரம் வாங்க..”


பத்து நாட்களுக்குப் பின்..


தலைமையகம் இன்னும் அனுமதி வழங்கவில்லை.எனவே எதுவும் சாத்தியமில்லை அம்மணி. பொறுங்க நான் பேசிப் பார்க்கிறேன்..”


பல வித தர்க்கம்/விவாதத்திற்குப் பின் தலைமை அலுவலர் ஒரு வழியாய் சம்மதித்தார்.


”24 மணி நேரம் கழித்து ஒரு ஓடிபி வரும். அதைக் கூறிவிட்டு பணம் எடுத்துக் கொள்ளலாம்..”


”மறுநாள் அரசு..விடுமுறை ஆயிற்றே ஐயா”


”ஆமாம்.. அதற்கு மறு நாள் வந்து பணம் பெற்றுக் கொள்ளுங்கள்..”


”ஐயா எனக்கொரு சந்தேகம்?”


”என்னம்மா..தயங்காமல் கூறுங்க?”


”வங்கியில் உள்ள சிலர் என் காசை அவசரத் தேவைக்கு உபயோகித்து விட்டு

அக்கவுண்ட் பெயர் மாற்றம்/கணக்கு முடக்கம்/நோ டெபிட் என நாளைக் கடத்துகிறீர்களா?”


”நீங்க ஓவராகப் பேசுறீங்க..!”


” இதுவரையில்தான் என் உத்தியோக வரம்பு. இதற்கு மேல் நேராகப் போய் மேனேஜரைப் பாருங்க..”


”அவரிடம் கெஞ்சி முறையிட்டால், எனக்கு பணம் உடனே கிடைக்குமா?”


”உறுதியாக என்னால் எதுவும் கூற முடியாதம்மா!”


மீண்டும் முதலில் இருந்து வாசிக்கவும்.



-பி. பழனி,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%