நேபாளம் வீதிகளில் தூய்மை பணியில் ‘ஜென் ஸீ’ போராட்டக்காரர்கள் தீவிரம்!
Sep 13 2025
50

காத்மாண்டு:
நேபாளத்தில் நடந்த கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்த நிலையில், தற்போது ‘ஜென் ஸீ’ போராட்டக்காரர்கள் காத்மாண்டுவில் தெருக்களை சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல் மற்றும் சிதைந்த சுவர்களில் மீண்டும் வண்ணம் தீட்டுதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில், துடைப்பங்கள் மற்றும் கழிவுகளை சேகரிக்கும் பைகளுடன் ஜென் ஸீ இளைஞர்கள் நேபாள தலைநகர் முழுவதும் நடைபாதைகளைத் சுத்தம் செய்து குப்பைகளைச் சேகரிக்கின்றனர். மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் குளிர்சாதன பெட்டிகள், மைக்ரோவேவ் ஓவன்கள் மற்றும் மின்விசிறிகளை திருப்பிக் கொண்டு தரும் பணியிலும் இறங்கியுள்ளனர்.
இது குறித்து போராட்டக் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த தூய்மைப் பணி ஜென் ஸீ குழுவினரின் குடிமைப் பொறுப்பைக் காட்டுகிறது. அவர்களின் போராட்டம் மறுகட்டமைப்பையும் நோக்கமாகக் கொண்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேபாளத்தில் இடைக்கால பிரதமராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?