
திருவண்ணாமலை மாவட்டம் 06.09.2025 கீழப்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
காலநிலை மாற்றம் விழா.
கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டத்தின் சார்பாக காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு போட்டிகள் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் மு.பிரசன்னா அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். உதவி தலைமை ஆசிரியர் ராஜேஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார் . விருந்தினராக அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் இளங்கோ கலந்துகொண்டு காலநிலை மாற்றம் குறித்து பல்வேறு கருத்துக்களை விளக்கினார். தேவையற்ற இடங்களில் மின்விளக்குகள், மின்விசிறிகள் இயங்கிக் கொண்டிருப்பதால் எந்த அளவிற்கு மாசுபாடு ஏற்படுகிறது ஆற்றில் எவ்வளவு வீண் அடிக்கப்படுகிறது . ஆற்றல் சேமிப்பில் மாணவர்கள் பங்கு என்ன என்பதை குறித்து விளக்கம் அளித்தார். பசுமைப் பள்ளி திட்டம் குறித்து உரைகளை சண்முக தொழிற்சாலை அரசு பள்ளி வேளாண்மை ஆசிரியர் பாலாஜி அவர்கள் விளக்கினார். விழாவினை தமிழ் ஆசிரியர் ராமமூர்த்தி அவர்கள் தொகுத்து வழங்கினார். பசுமை பள்ளி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் விழாவினை ஒருங்கிணைத்து நடத்தினார்.பட்டதாரி ஆசிரியர் முத்துக்குமார் அவர்கள் நன்றி உரையாற்றினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பசுமையை காப்போம் என்ற உறுதி மொழியோடு மகிழ்வோடு இவ்விழா நிறைவடைந்தது . தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?