பண்ருட்டி அருகே கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

பண்ருட்டி அருகே கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை



 கடலூர், நவ.1- காதல் திருமணம் செய்து கொண்ட ஆறாவது மாதத்தில் 5 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீமதி என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அருள்மணி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அருள்மணி சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் மாடுலர் கிச்சன் பிரிவில் பணி செய்து வருகிறார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அருள்மணி வீட்டிற்கு வந்து ஸ்ரீமதியுடன் பேசிக் கொண்டு இருந்தார். பின்னர் அவர் சிறிது நேரம் வெளியில் சென்று வந்து பார்த்தபோது தன்னுடைய அறையில் தூக்கிட்டு ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தற்போது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து அவர்கள் விசாரித்து வரும் அதே நேரத்தில் கோட்டாட்சியர் விசாரணையும் நடத்தப்பட உள்ளது.  

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%