பழங்குடி சமூகத்தின் சுற்றுச்சூழல் நம்பிக்கை.
தமிழ்நாடு -கேரளா வன எல்லைகளை இணைக்கும் ஒரு அற்புதக்காடு. பரம்பிக்குளம் வனம். கேரள எல்லையில் இருந்தாலும் நீலகிரியின் தொடர்ச்சியாக உள்ளது. அங்கு இருக்கும் பழங்குடியின மக்களின் உதவியோடு சுற்றுலா சென்று வருவது வாடிக்கையாகவே இன்றளவும் உள்ளது.
அடர்ந்த காட்டினுல் செல்வது அவ்வளவு சுலபமல்ல வன விலங்குகளும் அங்கு இருக்கின்றன என்றாலும், கேரள எல்லைக்குள் பாதுகாப்பிற்கு பழங்குடியின மக்கள் உத்தரவாத்துடன் உதவுதல் என்பது அசாத்தியமானது. இங்கு தேக்கு மரங்கள் சக்தி வாய்ந்ததாகவும், தெய்வீகத் தன்மை கொண்டதாகவும், வன தேவதை ஆவியாகவும் உலா வருவதாகவும் நம்புகின்றனர்.
தேக்கு மரங்கள் பல தலைமுறைகளைக் கடந்து வெட்டப்படாமல் கன்னியாகவே உள்ளது பல நூற்றாண்டுகளைக் கடந்து உயரமாகவும் வலுவாகவும் உள்ளது பல்வேறு காலகட்டங்களில் புயல், மழை, வெள்ள பாதிப்பிற்கு ஆளாகாமல் எவ்வித சேதாரம் இன்றி மாபெரும் ஆதாரமாக இன்றும் பல பருவ காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கின்றன.
அதிசயத்தக்க அந்த இடத்தில் செல்லும்போதும் மரத்தை தொடும் போதும் ஆசீர்வதிப்பான உணர்வும், பாதுகாப்பான உணர்வும், தெய்வீக அருளும் நம்மை சூழ்ந்து ஆனந்தத்தை அள்ளித் தருகிறது. மாசற்ற மரங்களின் தூய்மையான புனித காதலால் நாம் வசப்படுகிறோம்.
உலகின் பழமையான தேக்கு மரங்களில் ஒன்றாக அறியப்படும் மாபெரும் தேக்காக கன்னிமாரா தேக்கு உள்ளது அங்கு இருக்கும் மற்ற மரங்களும் அப்படியாகவே வளர்ந்து வருகிறது. யாரும் வெட்டுவதுமில்லை எடுப்பதும் இல்லை சிறு குச்சிகளை கூட பொறுக்குவதும் இல்லை.
நீண்டகால பாரம்பரிய பரம்பிக்குளம் கன்னிமாரா காடுகள் கன்னிமாரா தேக்கு நம்பிக்கையால் காலத்தால் வளர்க்கப்படுகிறது காதர் ,மலசார் பழங்குடியின சமூகத்தின் தாயகமாக இருந்த நிலையில் சக்தி வாய்ந்த ஆன்மா இங்கு இருப்பதாக நம்பி இயற்கையுடன் இணைந்து இன்னும் அவர்களின் வாரிசுகள் நம்பிக்கையோடு வாழ்கிறார்கள்.
மரங்களைச் சுற்றிய அமைதி மொழி மனதிற்கு இடம் அளிக்கிறது காதில் இனிமையான புரிதலை செலுத்தி சிந்தனையை சீராக்கப்படுவதாக உணர முடிகிறது. மரங்களின் மீது காதல் கொள்ள முடிகிறது.
பிரிட்டிஷ் கால இந்தியாவில் தேக்கு மரம் பிரவுன் கோல்டு என அழைக்கப்பட்டு வனங்கள் வெட்டப்பட்டன. பழங்குடிகளின் வாழிடமான கன்னிமாரா காட்டிக் கொடுக்கப்படவில்லை பாதுகாக்கப்பட்டது .நம்பிக்கையால் பாதுகாப்பாக இன்றளவும் மதிப்பிற்குரியதாகவே இருப்பது வியப்பில்லை .இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படாமல் பாதுகாத்து வரும் தலைமுறைகளிடத்தில் அடையாளப்படுத்துவது அனைவரின் கடமையாகும்.
உலகின் மிக பழமையான மரமாக அங்கீகரித்து கன்னிமாரா தேக்கு மரம் நமது இந்திய அரசாங்கத்தால் 1994-95இல் மகா விருச்சிக புரஷ்கார் விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எறும்பூர் கை. செல்வகுமார்,
சுற்றுச்சூழல் ஆர்வலர்,
செய்யாறு.