பருத்தி இறக்குமதிக்கு டிசம்பர் 31–ந்தேதி வரை சுங்க வரி விலக்கு அளித்தது மத்திய அரசு

பருத்தி இறக்குமதிக்கு டிசம்பர் 31–ந்தேதி வரை சுங்க வரி விலக்கு அளித்தது மத்திய அரசு

புதுடெல்லி, ஆக. 28–


வெளிநாடுகளில் இருந்து பருத்தியை சுங்க வரி இல்லாமல் இறக்குமதி செய்வதற்கான காலஅவகாசத்தை டிசம்பர் 31–ந்தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.


வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு ஏற்கெனவே 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது.


அதுதவிர, வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வரியும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சுங்க வரி இல்லாமல் பருத்தியை இறக்குமதி செய்வதற்கான அறிவிக்கையை மத்திய நிதி அமைச்சகம் ஆகஸ்ட் 18ல் வெளியிட்டது. இந்தச் சலுகை ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில் இந்தியா பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா 50 சதவீதமாக உயர்த்தி உள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பால் ஜவுளி துறை கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இந்த சூழலில் ஜவுளி ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக, மேலும் 3 மாதங்களுக்கு பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.


இது தொடர்பாக, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பருத்தி இறக்குமதிக்கு டிசம்பர் 31 வரை வரி விலக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக இறக்குமதி வரி விலக்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


இந்த நடவடிக்கை நூல், துணி, ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு பலனை அளிக்கும். உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த வரி விலக்கு உள்நாட்டு சந்தையில் பருத்தி கிடைப்பதை அதிகரிக்கும். பருத்தி விலையை உறுதிப்படுத்தும். இதன் மூலம் ஜவுளிப் பொருட்கள் மீதான பணவீக்க அழுத்தத்தைக் குறைக்கும்.


இது உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதன் மூலமும், ஜவுளித் துறையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும். இந்திய ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதி போட்டித்தன்மையை ஆதரிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%