பரூக் அப்துல்லாவிற்கு தடை விதித்த காஷ்மீர் காவல்துறை

பரூக் அப்துல்லாவிற்கு தடை விதித்த காஷ்மீர் காவல்துறை

ஜம்மு - காஷ்மீரின் தோடா தொகுதி யின் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினரான மெஹ்ராஜ் மாலிக், பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மெஹ்ராஜ் மாலிக் கைது செய்யப்பட்டதை எதி ர்த்து ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங் வியாழக்கிழ மையன்று ஜம்முவில் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க தேசிய மாநாட்டுக் கட்சித் தலை வரும், ஜம்மு- காஷ்மீரில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவருமான பரூக் அப்துல்லா வருகை தந்தார். ஆனால் ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் காவல்துறை பரூக் அப்துல்லாவை போராட்டம் நடைபெறும் இடத்தின் வளாகத்திலேயே தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் காவல்துறை - தேசிய மாநாட்டுக் கட்சி தொண்டர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்த சஞ்சய் சிங் நுழைவு வாயிலின் மீது ஏறி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனாலும் காவல்துறை பரூக் அப்துல்லாவிற்கு அனுமதி வழங்கவில்லை. இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பரூக் அப்துல்லா கூறுகை யில்,“ஜம்மு-காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. ஆனால் துணைநிலை ஆளுநர் ஆட்சி செய்கிறார். அரசியலமைப்பின் கீழ் பேச முயன்றாலும் தடுக்கப்படுகிறோம். இது நல்லதல்ல” என அவர் கூறினார். ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் உமர் அப்துல்லா முதலமைச்சராக உள்ளார். உமர் அப்துல்லா பரூக் அப்துல்லாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%