பல்கலை. தரவரிசையில் முதல் 500 இடங்களில் இந்தியா இல்லை: பிரதமர் மீது குற்றச்சாட்டு
உலகளாவிய பல்கலை. தரவரிசையில் முதல் 500 இடங்களில் இந்தியா இடம்பெறாததற்கு பிரதமர் நரேந்திர மோடி மீது சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷண் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உலகளாவிய பல்கலைக் கழகங்களின் கல்வித் தரவரிசை சமீபத்தில் வெளியானது. இந்தத் தரவரிசையில் முதல் 500 பல்கலைக் கழகங்களில் இந்தியா இடம்பெறத் தவறியதாக பிரதமர் மோடி அரசு மீது மூத்த வழக்குரைஞரும் சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, தனது எக்ஸ் பக்கத்தில் பிரசாந்த் பூஷண், "உலகின் முதல் 500 பல்கலைக் கழகங்களில் இந்தியாவின் ஒரு பல்கலைக் கழகம்கூட இல்லை. விஸ்வகுருவாக வேண்டும் என்ற கூற்றின் உண்மை இதுதான்.
மோடி ஆட்சியில், உயர் சிந்தனை மற்றும் அறிவியல் அறிவை அழித்த ஆர்எஸ்எஸ் துணைவேந்தர்களால் கட்டாயப்படுத்தியதால்தான், நமது பல்கலைக் கழகங்கள் சீரழிக்கப்பட்டுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.
தரவரிசையில், உலகளாவிய உயர்கல்வியில் 111 பல்கலை.களுடன் அமெரிக்காவே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. சீனா - 108 பல்கலை., ஐரோப்பிய ஒன்றியம் - 37 பல்கலை. என்றளவிலும் உள்ளன.
ஹார்வர்டு பல்கலை. தான் உலகின் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?