நட்புகளுடனும் உறவுகளுடனும் மென்மையாக பழகினால் பணிவுடன் அன்பும் கிடைக்குமே ..
படிக்கப் படிக்க பணிவு வரும் அதை கடைபிடிக்க கடைப்பிடிக்க துணிவு வரும் .
கற்ற பாடத்தை மறக்காதே அதையே சுற்றமென எண்ணிவிடு
உயர்வு தாழ்வு உண்டு என்பதை உணர்ந்தாலே பணிவு தானே வரும்
மூத்தவர் அனுபவங்கள் சத்தாக இருக்கும் என்பதால்
பித்தாக மறுக்காமல் நித்தம் அதைக் கேட்டு விடு
வெற்றி கிடைத்தால் போற்று தோல்வி அடைந்தால் அனுபவம் என உணர்
எதையும் முதலில் பழக அரிதே..
பழகப் பழகு அது எளிதே ..
அரிதை எளிதாக மாற்ற எண்ணிவிடு
அதுவே உனக்கு கிடைத்த வெற்றிக்கனி என சுவைத்து விடு
உஷா முத்துராமன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%