பழையன கழிதலும்* *புதியன புகுதலும்*!

பழையன கழிதலும்*  *புதியன புகுதலும்*!



காலத்தின் மாறுபாட்டால்

காண்பழசு மாறும்

கண்ணெதிரில் காண்கின்ற

காட்சிகளே போகும்!

ஞாலத்தின் சூழ்நிலையில்

நலமாகத் தோன்றும்

நல்லவையும் தான்மாறும்

பாரில் என்றும்!

கோலமிகுப் பழக்கங்கள்

வழக்கங்கள் எல்லாம்

கோடிக்கே போய்சேரும்

கொள்வாரே இன்றி!

பாலமெனக் காண்கின்ற

பண்பாடும் மாறும்

பட்டெனவே எல்லாமே

பாங்கின்றிச் சேரும்!



புதுமைமிகு எண்ணங்கள்

பூத்திடவே காணும்

பொலிவான பழக்கங்கள்

போய்விடுமே தூரம்!

இதயந்தான் ஏற்காத

வண்ணந்தான் ஆகும்

ஈடில்லா வழக்கங்கள்

எல்லாமே வேகும்!

உதயமாகும் புத்துணர்ச்சி

சேர்ந்தேதான் இங்கே

உன்னதமாய்க் காண்கின்ற

எல்லாமே எங்கோ

அதிசயமாய்ப் போய்விடுமே

புதுமையெலாம் பூக்கும்

அவசரத்தில் எல்லாமே

தலைகீழாய் மாறும்!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%