பவுன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது; 4 மாதத்தில் ரூ.1 லட்சத்தை தொட வாய்ப்பு

பவுன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது; 4 மாதத்தில் ரூ.1 லட்சத்தை தொட வாய்ப்பு

சென்னை:

சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.85 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. அடுத்த 4 மாதங்​களில் ஒரு பவுன் தங்​கம் ரூ.1 லட்​சத்தை தொடும் என்று நகை வியா​பாரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.


சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று ஒரே நாளில் ரூ.1,680 உயர்ந்து ரூ.85 ஆயிரத்தை தாண்டி புதிய உச்​சத்தை தொட்​டது. நேற்று காலை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84 ஆயிரத்தை தொட்​டது. தொடர்ந்து நேற்று மாலை பவுனுக்கு 1,120 உயர்ந்து ரூ.85,120-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. இதே​போல, ஒரு கிராம் தங்​கம் ரூ.210 உயர்ந்து ரூ.10,640-க்கு விற்​பனை​யானது. 24 காரட் சுத்த தங்​கம் ரூ.92,856-க்கு விற்​கப்​பட்​டது.


மேலும், வெள்ளி விலை​யும் அதிரடி​யாக உயர்ந்​தது. வெள்ளி கிரா​முக்கு ரூ.2 உயர்ந்​து, ரூ.150 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1,50,000 ஆகவும் இருந்​தது. கடந்த 6-ம் தேதி ஆபரணத் தங்​கம் பவுன் ரூ.80,040-க்கு விற்​கப்​பட்ட நிலை​யில் நேற்று ரூ.85,120-ஆக உயர்ந்​தது. கடந்த 17 நாட்​களில் பவுனுக்கு ரூ.5,080 வரை உயர்ந்​துள்​ளது குறிப்​பிடத்​தகது. கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் தற்​போது வரை பவுனுக்கு ரூ.27,040 வரை உயர்ந்​துள்​ளது. தங்​கம் விலை உயர்​வால், நகை வாங்க எண்​ணி​யிருந்த மக்​கள் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர்.


இதுகுறித்து சென்னை தங்​கம் மற்​றும் வைர வியா​பாரி​கள் சங்​கத் தலை​வர் ஜெயந்தி லால் சலானி கூறும்​போது, “எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யுள்​ளது. இதனால், இந்​திய மென்​பொறி​யாளர்​கள் வேலை​யிழக்​கும் நிலை ஏற்​பட்​டு, திறமை​யான ஆட்​களுக்கு பற்​றாக்​குறை உரு​வாகும், இதன் மூல​மாக, அமெரிக்க பொருளா​தா​ரம் வீழ்ச்​சிப் பாதைக்கு செல்​லும் என்ற அச்​சம் ஏற்பட்​டுள்​ளது. இதனால் பெரு முதலீட்​டாளர்​கள் பார்வை தங்​கத்​தின் மீது திரும்​பி​யுள்​ளது.


இதுத​விர, அமெரிக்க பெடரல் வங்​கி​யின் வட்டி விகித குறைப்பு நடவடிக்​கை, அமெரிக்கா டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்​களால் தங்​கத்​தின் விலை உயர்ந்​துள்​ளது. அடுத்த 4 மாதங்​களில்​ பவுன்​ தங்​கம்​ விலை ரூ.1 லட்​சத்​தை தொட வாய்ப்​புள்​ளது” என்​றார்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%