ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என பாகிஸ்தான் ராணுவ தளபதி கூறியுள்ளார்.
காபூல்,
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலீபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அண்டை நாடான பாகிஸ்தானுடனான மோதல் போக்கு அதிகரித்தது. இந்த மாத தொடக்கத்தில் காபூலில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதற்கு பாகிஸ்தானின் வானவெளி தாக்குதல் தான் காரணம் என ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியது. இதற்கு பதிலடியாக நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கா னிஸ்தான் கூறியது. ஆனால் இந்த எண்ணிக்கையை பாகிஸ்தான் மறுத்தது. 23 வீரர்கள் மட்டும் உயிர் இழந்த தாகவும், இது எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்றும் பாகிஸ்தான் தெரிவித்தது.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறி வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலால் மேலும் பதற்றம் அதிகரித்தது. இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் கத்தார் மற்றும் துருக்கி ஈடுபட்டது. இது தொடர்பாக இஸ்தான் புல்லில் தொடர்ச்சியாக 4 நாட்கள் அமைதி பேச்சு வார்த்தை நடந்தது. ஆனாலும் இதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. நேற்று மீண்டும் நடத்தப்பட்டபேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை கடை பிடிக்க ஒப்புக்கொண்டதாக துருக்கி வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. துருக்கியும், கத்தாரும் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இரு தரப்பினருடன் ஒத்துழைக்க தயாராக இருப்ப தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தலீபான் செய்தி தொடர்பாளர் ஜபி ஹிஸ்லா முஜாகித் வெளியிட்ட அறிக்கையில்,
பாகிஸ்தானுடன் நல்லுறவை ஆப்கானிஸ்தான் விரும்புகிறது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக வருகிற 6-ந்தேதி பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே நடந்து வரும் போர் முடிவுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிர் முனீர் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது ஆப்கானிஸ்தான் உள்பட அனைத்து அண்டை நாடுகளுடன் பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. ஆனால் ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. என கூறி உள்ளார்.