பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே 48 மணிநேர சண்டை நிறுத்தம் அமல்
Oct 16 2025
15

இஸ்லமாபாத்,
ஆப்கன் தலைநகர் காபூல் மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள சந்தை ஆகியவற்றில் பாகிஸ்தான் கடந்த வாரம் குண்டு வீசியது. ஆனால் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தானில் செயல்படும் தெக்ரிக் இ-தலிபான்களுக்கு (டிடிபி) ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுப்பதையும், ஆயுதப் பயிற்சி அளிப்பதையும் தலிபான் அரசு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று மட்டும் பாகிஸ்தான் அறிக்கை வெளியிட்டது கடந்த 2021-ம் ஆண்டு முதல் தெக்ரிக் இ-தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர் என பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
இந்நிலையில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, பாகிஸ்தான் எல்லை மீது ஆப்கன் படையினர் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தினர். இதற்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில், பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் 48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் நேரப்படி மாலை 6 மணிக்கு இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் தீர்க்கப்படாத மற்றும் சிக்கலான பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு காண இரு தரப்பும் தீவிர முயற்சிகளை மேற்கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தான் சண்டை நிறுத்தம் கோரியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. எனினும், ஆப்கானிஸ்தான் இது தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?