பாக்., ஜவுளி ஏற்றுமதி உச்சம் ரூ.14,200 கோடிக்கு வர்த்தகம்

பாக்., ஜவுளி ஏற்றுமதி உச்சம் ரூ.14,200 கோடிக்கு வர்த்தகம்


 

கராச்சி: பாகிஸ்தான் ஜவுளி ஏற்றுமதி, மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 14,200 ரூபாயை எட்டி உச்சம் தொட்டுள்ளது.


நம் அண்டை நாடான பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜவுளித்துறை, 8.5 சதவீதம் பங்களிக்கிறது. ஜவுளித் துறை என்பது அந்நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியமானது.

 

அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பாகிஸ்தானில் இருந்து அதிகளவு ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தநிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் ஜவுளி ஏற்றுமதியில், 14,200 ரூபாயை எட்டி உச்சம் தொட்டுள்ளது.


அதிலும் பின்னலாடை ஏற்றுமதி மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு, 4,300 கோடி ரூபாயை எட்டியதாக பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில், நாட்டின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் ஜவுளித் துறை மட்டும் 60 சதவீதத்தைக் கொண்டிருந்ததாகவும் அந்த வங்கி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


அண்டை நாடுகள் மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு எதிரொலி, மதிப்பு கூட்டப்பட்ட வகைகளுக்கான வலுவான தேவை, வலுவான வர்த்தக தொடர்பு போன்ற காரணங்களால் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக பாக்., ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%