பாஜக மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போல'- அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் பதவி  வெங்காயம் போல'- அண்ணாமலை

'

சென்னை, ஜூலை 22-

பாஜக மாநில தலைவர் பதவி வெங்காயம் போல் தான், உரிக்க உரிக்க ஒன்று இருக்காது என முன்னாள் தலைவர் அண்ணாமலை கிண்டல் அடித்துள்ளார்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு-

• ஆட்சியில் பங்கு தர நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே?

 

 பாஜக யாரையும் ஏமாற்றுகிற கட்சி இல்லை. அதே நேரத்தில் ஏமாறுகிற கட்சியும் இல்லை. எந்த கட்சியும், மற்றொரு கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம். எல்லா கட்சிகளும் மற்ற கட்சிகளை சகோதரத்துவதோடு பார்க்க வேண்டும். 

• அதிமுகவுடன் ஒரு பெரிய கட்சி இணைய உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறாரே?

அவர் பேட்டியை நான் பார்க்கவில்லை. அதிமுகவுடன் பெரிய கட்சி சேருமா? என்று எனக்கு தெரியாது. 


•கோவையில் தொடங்கிய எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை? 

கட்சியின் சார்பாக பாஜக மாநில தலைவரும், மத்திய இணை அமைச்சரும் கலந்து கொண்ட போது நான் எதற்காக கலந்து கொள்ள வேண்டும்? 


• பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவி உங்களு தர வாய்ப்பு இருக்கிறதா? 

பதவியை நோக்கி நான் சென்றதில்லை, மாநில தலைவர் பதவியே வெங்காயம் போல் தான். உரிக்க உரிக்க ஒன்றும் இல்லை, நான் எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%