பாரதியார் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்

பாரதியார் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம் இராமேஸ்வரம் கிளை, பாம்பனில் உள்ள அன்னை ஸ்கொலாஸ்டிகா மகளிர் கலைக் கல்லூரியுடன் இணைந்து, மகாகவி பாரதியாரின் 133-வது பிறந்தநாள் கருத்தரங்கம் மற்றும் கவிதைப் போட்டியை நடத்தியது. இந்தக் கருத்தரங்கம், தமுஎகச இராமேஸ்வரம் கிளை தலைவர் த.இராமசந்திரபாபு தலைமையில் நடை பெற்றது. கல்லூரி தமிழ்துறை தலைவர் வே. மங்க ளேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் ஆனி பெர்பட் சோபி மற்றும் தமுஎகச இராமேஸ்வரம் கிளைச் செயலாளர் இரா.மோகன் ஆகியோர் வாழ்த்து ரையாற்றினர். “இந்திய பன்மைத்துவமும் பாரதியும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, தமுஎகச மாவட்ட துணைத் தலை வர் நா. கலையரசன் பரிசுகளை வழங்கி கருத்துரையாற்றி னார். இதனைத் தொடர்ந்து கவிஞர் தர்மபுத்திரன் பாடல் பாடினார். இவ்விழாவில் தமுஎகச நிர்வாகி மரிய பசானியோ, கல்லூரி துணை முதல்வர் எமல்டா ராணி, பேராசிரி யர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியின் முடிவில் தமுஎகச துணைச் செயலாளர் உ.பாண்டி நன்றி கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%