கவிஞர் இரா .இரவி
புறப்பார்வை இரண்டு இல்லா விட்டாலும்
அகப்பார்வை ஆயிரம் பெற்றவர் நீங்கள்
சாதாரண வாழ்க்கை எங்களுக்கு
சாரனை வாழ்க்கை உங்களுக்கு
சராசரி மனிதர்கள் நாங்கள்
சரித்திர மனிதர்கள் நீங்கள்
வாழ்க்கையில் போராட்டம் உண்டு எங்களுக்கு
வாழ்க்கையே போராட்டம் உங்களுக்கு
நூறு கோடியில் சிறு புள்ளி நாங்கள்
கோடியில் ஒருவர் நீங்கள்
சிறு துன்பத்திற்க்கு கலங்கும் நாங்கள்
பெரும் துன்பத்திற்க்கு கலங்காதவர் நீங்கள்
வாழ்க்கையில் இருட்டு என வருந்துபவர் நாங்கள்
இருட்டே வாழ்க்கை என்ற போதும்
ஒளி ஏற்றுபவர் நீங்கள்
இருக்கை பின்னத்தெரியாது பார்வையுள்ள
எங்களுக்கு
இருக்கையை சிறப்பாக பின்னுபவர்கள் நீங்கள்
விழியில் தூசி விழுந்தால் துடிப்போம் நாங்கள்
விழியே தூசியானதால் துடிப்பதில்லை நீங்கள்
பிறந்தோம் இறந்தோம் என்பது எங்களுக்கு
பிறந்தோம் சாதித்தோம் என்பது உங்களுக்கு.
--
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?