பா.ம.க. செங்கல்பட்டு மத்திய மாவட்ட அமைப்புச் செயலாளராக பனங்காட்டுப்பாக்கம் எல்.குணா நியமனம்: அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

பா.ம.க. செங்கல்பட்டு மத்திய மாவட்ட அமைப்புச் செயலாளராக பனங்காட்டுப்பாக்கம் எல்.குணா நியமனம்: அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

திருப்போரூர், செப். 18–


பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மத்திய மாவட்ட அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட பனங்காட்டுப்பாக்கம் எல் குணா கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பனங்காட்டுப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் வசித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய அமைப்பு செயலாளர் பனங்காட்டுப்பாக்கம் எல்.குணாவை கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், செங்கல்பட்டு மத்திய மாவட்டத்தின் புதிய அமைப்புச் செயலாளராக நியமனம் செய்து அறிவித்தார்.


இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மத்திய மாவட்ட அமைப்புச் செயலாளர் பனங்காட்டுப்பாக்கம் எல்.குணா, மாநில துணைத்தலைவர் பிவிகே.வாசு, செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் காயார்.லோ. ஏழுமலை, செங்கல்பட்டு மாவட்டத்தலைவர் நா.கணேசன்மூர்த்தி ஒருங்கிணைந்த மத்திய மாவட்ட அமைப்புச் செயலாளரும் தண்டலம் மடைத்தூர் ஒன்றிய குழுக் உறுப்பினருமான தண்டலம் தட்சிணாமூர்த்தி, ஆகியோர் முன்னிலையில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி நியமன கடிதத்தை பெற்று வாழ்த்துப்பெற்றார்‌. இந்நிகழ்வில் கட்சியினர்கள் திரளாக உடன் இருந்தனர்கள்.


புதியதாக செங்கல்பட்டு மத்திய மாவட்ட அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பனங்காட்டுப்பாக்கம் எல்.குணா தனது 16 வயதிலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சியில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டு கட்சிப் பணியாற்றி வருகிறார். இவருக்கு கிளைக் கழக செயலாளர் பதவியும், திருப்போரூர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் பதவியும் பின்பு திருப்போரூர் வடக்கு ஒன்றிய வன்னியர் சங்க செயலாளர் பதவியும், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருப்போரூர் வடக்கு ஒன்றிய அமைப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. தற்போது செங்கல்பட்டு மத்திய மாவட்ட அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசியலர் பிரமுகர்கள், பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களையும் ஆதரவினையும் தெரிவித்து வருகின்றனர்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%