பிரதமர் வாழ்க்கை சினிமாவாகிறது; மோடி வேடத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன்
Sep 19 2025
46

திருச்சூர், செப். 17–
நடிகர் உன்னி முகுந்தன் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கிறார். ’மா வந்தே’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கிராந்தி குமார் இயக்குகிறார்.
பிரதமர் மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவரின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக உள்ளது. அதுகுறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது.
மோடியின் வாழ்க்கையை திரைப்படமாக சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக உள்ளார். இவர் நடிப்பில் வெளியான மார்கோ ரூ. 120 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. சமீபத்தில் இவர் நடித்த ’கெட் செட் பேபி’ திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி நுட்ப நிபுணர்களின் பங்களிப்புடனும், அற்புதமான விஎப்எஸ் தொழில்நுட்பங்களுடனு சர்வதேச தரத்தில் இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.
பான்–இந்தியா அளவில் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியீடப்படுவதோடு, ஆங்கிலத்திலும் தயாரிக்கப்படுகிறது. இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். கிராந்தி குமாரின் எழுத்து மற்றும் இயக்கத்தில், கே. கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணி மேற்கொள்ள உள்ளார்.
சிறு வயதில் துவங்கி இந்திய நாட்டின் பிரதமராக உயர்ந்த வரலாறு வரை உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, அவருக்கு எப்போதும் ஆதரவாக இருந்த தாயார் ஹீராபென் மோடியுடனான ஆழமான பந்தத்தை இத்திரைப்படம் வெளிப்படுத்தும்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?