
பாஸ்டன், அக். 4–
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு, பிறப்பால் குடியுரிமையை வழங்குவதை, அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்று பாஸ்டனில் உள்ள பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம், நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கோ அல்லது தற்காலிகமாக தங்கியிருப்பவ ர்களுக்கோ பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமையை ரத்து செய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ளது. இது அமெரிக்க அதிபரின் பிறப்பால் குடியுரிமையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
அமெரிக்க சட்டம், 14வது திருத்தத்தின்படி, குடியுரிமைப் பிரிவின் கீழ் விவரிக்கப்பட்டுள்ள, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் பிறப்பால் குடியுரிமைக்கு உரிமையுடையவர்கள் என்ற வாதத்தின் கூற்றினை ஏற்று, அந்த உரிமையை வழங்குவதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில், பிறப்பால் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டன. இது தொடர்பாக அமெரிக்க கீழ் நீதிமன்றங்கள் பிறப்பித்த தடை உத்தரவுகளை பெடரல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உறுதி செய்திருக்கிறது.
குடியுரிமை என்பது ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பெற்றோரின் செயல்களை அடிப்படையாக வைத்து முடிவு செய்வது என்ற வகையில் மாற்றுவதற்கான அண்மைக்கால முயற்சிகள் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் இருப்பதற்கு அனைத்து காரணங்களையும் வழங்குகிறது. ஆனால், மிக அரிதான சூழ்நிலை என்னவென்றால், ஒருவர் அமெரிக்காவில் பிறந்தார் என்ற எளிய உண்மை ஒன்றுதான் அந்த உரிமையை வழங்குகிறது என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?