
மணிலா,
ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை கொமெ என்ற புயல் தாக்கியது. குறிப்பாக, அந்நாட்டின் பங்கசினான் மாகாணம் அக்னோ நகர் புயலால் கடுமையான பாதிப்பை சந்தித்தது. சூறாவளி காற்றுடன், கனமழையும் கொட்டித்தீர்த்தது. மணிக்கு 120 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 லட்சத்து 78 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிலிப்பைன்சை தாக்கிய புயலால் ஏற்ற்பட்ட கனமழை, வெள்ள, நிலநிச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?