பிஹாரில் சாலையோரம் விவிபாட் ஒப்புகைச்சீட்டு: தேர்தல் ஆணையம் விளக்கம்

பிஹாரில் சாலையோரம் விவிபாட் ஒப்புகைச்சீட்டு: தேர்தல் ஆணையம் விளக்கம்



புதுடெல்லி: பிஹாரில் சாலை​யோரம் விவி​பாட் ஒப்​பு​கைச்​சீட்டு கிடந்​தது குறித்து தேர்​தல் ஆணை​யம் விளக்​கம் அளித்​துள்​ளது.


பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான முதல்​கட்ட வாக்​குப் பதிவு கடந்த 6-ம் தேதி நடை​பெற்​றது. இந்​நிலை​யில் பிஹாரின் சமஸ்​திபூர் மாவட்​டத்​தில் சாலை​யோரம் விவி பாட் ஒப்​பு​கைச்​சீட்​டு​கள் சிதறிக் கிடக்​கும் வீடியோ சமூக வலை​தளங்​களில் வெளி​யானது. இதையடுத்து தேர்​தல் ஆணை​யம் விரைந்து நடவடிக்கை மேற்​கொண்​டது.


இதுகுறித்து தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் நேற்று கூறிய​தாவது: சம்பவ இடத்​துக்கு சமஸ்​திபூர் மாவட்ட ஆட்​சி​யர் நேரில் சென்று விசா​ரிக்க உத்​தர​விடப்​பட்​டது. பிஹார் தேர்​தலுக்கு முன், மாதிரி வாக்​குப் பதிவு நடத்தி செயல்​விளக்​கம் அளிக்​கப்​பட்​டது. இதன் விவிபாட் சீட்​டு​களே அங்கு கிடந்​துள்​ளன. எனவே பிஹார் தேர்​தல் நடை​முறை​யில் எவ்​விதத்​தி​லும் நேர்மை சமரசம் செய்​யப்​பட​வில்​லை.


இதுகுறித்து வேட்​பாளர்​களுக்​கும் தகவல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. எனினும் அலட்​சி​ய​மாக செயல்​பட்​டதற்​காக சம்​பந்​தப்​பட்ட உதவி தேர்​தல் அதி​காரி (ஏஆர்ஓ) இடைநீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார். எப்​ஐஆர் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%