பீகார் சட்டப்பேரவை கூடியது; புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
Dec 02 2025
69
பீகார் சட்டசபைக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
பாட்னா,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் கைப்பற்றியது. இதையடுத்து, பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் கடந்த மாதம் 20ம் தேதி பதவியேற்றார்.
இந்நிலையில், பீகார் சட்டப்பேரவை இன்று கூடியது. இந்த கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது. சட்டப்பேரவை இன்று கூடியதும் தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நரேந்திர நாராயணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சபாநாயகராக ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவருமான நாராயணன் செயல்பட்டு வருகிறார். ஆனால், இந்த கூட்டத்தொடரில் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். சபாநாயகருக்கான தேர்தல் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?