நேரிசை வெண்பா!
மென்மை
மயிலிறகாய்
மேன்மையாய்க்
கண்டாலும்
வன்மையாய்
ஏற்றலாகா;
வண்டியின்...
சக்கரத்தின்
அச்சுதான்
சார்ந்தே
முறிந்திடும்!
தக்கவா
றேற்றல்
தக.
மெலிந்தாரே
என்றெண்ணி
மேன்மையின்றித்
துன்பம்
வலிந்தே
கொடுத்தலும்
வன்மை...
நலமின்றிச்
செய்யாமல்
நாளும்
செழிப்புகொண்டால்
சீர்மையே
பெய்யுமே
வாழ்விலே
பீடு!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%