புதின் இல்லத் தாக்குதல்: ஆதாரங்களை அமெரிக்காவிடம் தந்தது ரஷ்யா

புதின் இல்லத் தாக்குதல்: ஆதாரங்களை அமெரிக்காவிடம் தந்தது ரஷ்யா




மாஸ்கோ, ஜன.


ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினின் இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த ஆதாரங்களை ரஷ்யா அமெரிக்காவிடம் அளித்துள்ளது.


இது குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறியதாவது:–


வால்டை ஏரி அருகே உள்ள புதினின் இல்லத்தை உக்ரைன் 91 ட்ரோன்களால் தாக்கி அழிக்க முயன்றது. அதற்கான ஆதாரங்களை அமெரிக்காவிடம் வழங்கியுள்ளோம். இந்தத் தாக்குதல் முயற்சி உக்ரைன் உளவுப் பிரிவால் திட்டமிடப்பட்டது. அமெரிக்கா இதை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.


கடந்த டிசம்பர் 28–ந்தேதி- இரவில் நடந்ததாக ரஷியா கூறும் இந்தத் தாக்குதலுக்கு சேதமடைந்த ட்ரோன் ஒன்றின் (படம்) விடியோவையும், ட்ரோன்கள் உக்ரைனின் சுமி, செர்னிஹிவ் பகுதிகளில் இருந்து வந்ததாகக் கூறும் வரைபடத்தையும் ஆதாரமாக வழங்கியுள்ளது. ஆனால் உக்ரைன் இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ளது. ‘ரஷ்யா எந்த நம்பகமான ஆதாரத்தையும் வழங்கவில்லை. இது போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைத் தடுக்கும் முயற்சி‘ என்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%