புதிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு எதிராக காங். சார்பில் ஜன.8 முதல் நாடு தழுவிய போராட்டம்
Jan 05 2026
13
புதுடெல்லி: புதிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு எதிராக ஜனவரி 8-ம் தேதி முதல் நாடு தழுவிய காங்கிரஸ் கட்சி நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயர், விக்ஷித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) (ஜி ராம் ஜி) என்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய ஊரக வேலை உறுதித் திட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கினார்.
மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை கண்டித்தும், மசோதாவின் குறிப்பிட்ட அம்சங்களை எதிர்த்தும் காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது வேணுகோபால் கூறியதாவது:
காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அமல் செய்யப்பட்டது. இந்த திட்டத்தால் வறுமை குறைந்தது. தொழிலாளர்களின் இடம்பெயர்வு குறைந்தது. புதிய கால்வாய்கள், அணைகள் கட்டப்பட்டன. கரோனா பெருந்தொற்று மற்றும் நெருக்கடியான காலங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் மக்களின் பாதுகாவலனாக விளங்கியது.
காங்கிரஸ் கொண்டு வந்த இந்த திட்டத்துக்கு மாற்றாக ஜி ராம் ஜி என்ற புதிய திட்டத்தை பாஜக அரசு அமல்படுத்தி உள்ளது. புதிய திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. இந்த திட்டத்துக்கான நிதி முறையாக ஒதுக்கப்படவில்லை. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மத்திய அரசு மறைமுகமாக அழித்து வருகிறது. இவ்வாறு வேணுகோபால் தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?