புத்தகங்களை வாசிக்கும் போது தனிமனித ஒழுக்கம் மேம்படும் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பேச்சு

புத்தகங்களை வாசிக்கும் போது தனிமனித ஒழுக்கம் மேம்படும் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பேச்சு



புதுக்கோட்டை, அக். 12- புத்தகங்களை வாசிக்கும் போது தனிமனித ஒழுக்கம் மேம்படும் என்று, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய 8 ஆவது புத்தகத் திருவிழாவில் 9 ஆம் நாளான சனிக்கிழமை இரவு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களையும், புத்தகத் திருவிழாவிற்கு தன்னார்வலர்களாக உழைத்த தொண்டர்களைப் பாராட்டியும் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பேசினார். அப்போது, “விலங்கினங்கள், பறவைகள் தங்களது வாழ்க்கை முறைகளை அடுத்த தலைமுறைக்கு அழகாகச் சொல்லிக் கொடுக்கின்றன. ஆனால், மனிதர்கள் தனிமனித ஒழுக்கத்தில் இருந்து தவறியதனால் பல்வேறு சீரழிவுகள் நடக்கின்றன. சமூக மாற்றத்துக்கு தனிமனித ஒழுக்கம் முக்கியமானது. தனிமனித ஒழுக்கம் மேம்பட புத்கங்களைப் படிக்க வேண்டும். நம்முடைய பிள்ளைகள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறோமோ, அவற்றையெல்லாம் முதலில் பெற்றோர்கள் விலக்கி வைக்க வேண்டும்’’ என்றார். விழாவிற்கு ஆதிகாலத்து அலங்கார மாளிகை அதிபர் எம்ஏபி. ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் க. சதாசிவம் வரவேற்றார். கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா.சின்னதுரை, சென்னை ஐஐடி திட்டத் தலைவர் என். ஹரிகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். கவிஞர் மு.முருகேஷ் சிறப்புக் கவிதை வாசித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%